ETV Bharat / sports

IND vs AUS: தொடரும் காயம் - அடுத்த விக்கெட் சைனி - வேகப்பந்து வீச்சாளர்

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார்.

IND vs AUS: Navdeep Saini complains of groin pain, goes off field

author img

By

Published : Jan 15, 2021, 11:50 AM IST

பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இப்போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தனது எட்டாவது ஓவரை வீசிக்கொண்டிருக்கும்போது, அவரது இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் 7.5 ஓவர்களை வீசியிருந்த அவர் போட்டியின் பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சைனி வீசிய ஓவரின் கடைசி பந்தை இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா வீசினார்.

முன்னதாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகினர். இதனால் வேகப்பந்து வீச்சில், டெஸ்ட்டில் அறிமுகம் இல்லாத வீரர்களைக் கொண்டு இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்கியது.

இந்நிலையில் அதிலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறியிருப்பது இந்திய அணிக்கு பெரும் தலைவலியை உண்டாக்கிவுள்ளது.

இதையும் படிங்க: 'இது போன்ற மோசமான பேட்டிங்கை நான் கண்டதில்லை' - கிராண்ட் பிளவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.