பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜன.10) நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் 192 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்தது.
அந்த அணியில் லபுசாக்னே, ஸ்மித், காமரூன் கிரீன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை எடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது.
-
TEA in Sydney ☕️
— ICC (@ICC) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Another excellent session for the hosts. Is there a way back for India?#AUSvIND SCORECARD ▶️ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/9WZgsm7akO
">TEA in Sydney ☕️
— ICC (@ICC) January 10, 2021
Another excellent session for the hosts. Is there a way back for India?#AUSvIND SCORECARD ▶️ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/9WZgsm7akOTEA in Sydney ☕️
— ICC (@ICC) January 10, 2021
Another excellent session for the hosts. Is there a way back for India?#AUSvIND SCORECARD ▶️ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/9WZgsm7akO
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 ரன்களை இந்தியாவுக்கு இலக்காகவும் நிர்ணயித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
இதில் சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹெசில்வுட் வீசியப் பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த புஜாரா வழக்கம்போல், தனது தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைச் சோதித்தார்.
-
🙌 Fifty for Rohit Sharma!
— ICC (@ICC) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A good return for the India opener ⭐️#AUSvIND SCORECARD ▶️ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/0xgqZDH0Rf
">🙌 Fifty for Rohit Sharma!
— ICC (@ICC) January 10, 2021
A good return for the India opener ⭐️#AUSvIND SCORECARD ▶️ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/0xgqZDH0Rf🙌 Fifty for Rohit Sharma!
— ICC (@ICC) January 10, 2021
A good return for the India opener ⭐️#AUSvIND SCORECARD ▶️ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/0xgqZDH0Rf
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா அரைசதம் கடந்த கையோடு, 52 ரன்களில் பாட் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, இந்த அணி தடுமாறத் தொடங்கியது.
பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானேவும் தனது பொறுப்பை உணர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்தது.
-
🏏 STUMPS in Sydney!
— ICC (@ICC) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Three wonderful sessions for Australia. Can India battle it out on the final day?#AUSvIND SCORECARD ▶️ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/8EISzpB62l
">🏏 STUMPS in Sydney!
— ICC (@ICC) January 10, 2021
Three wonderful sessions for Australia. Can India battle it out on the final day?#AUSvIND SCORECARD ▶️ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/8EISzpB62l🏏 STUMPS in Sydney!
— ICC (@ICC) January 10, 2021
Three wonderful sessions for Australia. Can India battle it out on the final day?#AUSvIND SCORECARD ▶️ https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/8EISzpB62l
இந்திய அணி தரப்பில் புஜாரா 9 ரன்களுடனும், ரஹானே 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ், ஹெசில்வுட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். நாளை(ஜனவரி 11) நடைபெறும் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் 309 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் இனரீதியாக இழிவுப்படுத்தப்பட்ட சிராஜ்; ஆட்டத்தின் இடையே பரபரப்பு!