பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று (ஜன. 10) முடிந்த நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை நிறைவுசெய்த ஆஸ்திரேலிய அணி 407 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 54 ரன்களுடனும், சுப்மன் கில் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை எடுத்தது.
-
A brilliant start to the day for Australia!
— ICC (@ICC) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Nathan Lyon takes his 395th Test wicket and Australia are seven wickets away from victory.#AUSvIND pic.twitter.com/50181SHsg1
">A brilliant start to the day for Australia!
— ICC (@ICC) January 10, 2021
Nathan Lyon takes his 395th Test wicket and Australia are seven wickets away from victory.#AUSvIND pic.twitter.com/50181SHsg1A brilliant start to the day for Australia!
— ICC (@ICC) January 10, 2021
Nathan Lyon takes his 395th Test wicket and Australia are seven wickets away from victory.#AUSvIND pic.twitter.com/50181SHsg1
இதையடுத்து 309 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஐந்தாம் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் கேப்டன் ரஹானே 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் தொடங்கினர். இதில் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரஹானே, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நாதன் லயனிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினார்.
இதனால் இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், டிராவிலாவது நிறைவுசெய்யுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியது. பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
-
Rishabh Pant brings up his half-century!
— ICC (@ICC) January 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Four fours and three sixes in his innings so far...#AUSvIND pic.twitter.com/4qO06BGzHC
">Rishabh Pant brings up his half-century!
— ICC (@ICC) January 11, 2021
Four fours and three sixes in his innings so far...#AUSvIND pic.twitter.com/4qO06BGzHCRishabh Pant brings up his half-century!
— ICC (@ICC) January 11, 2021
Four fours and three sixes in his innings so far...#AUSvIND pic.twitter.com/4qO06BGzHC
அதிலும் நாதன் லயனின் ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி என விளாசி அரைசதத்தைக் கடந்தார். அதன்பின் துவண்டுகிடந்த இந்திய ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்விதத்தில், அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களைத் திணறச்செய்தார்.
மறுமுனையில் புஜாரா, ஜாம்பவான்களின் விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத் தடுத்தார். இதனால் இந்த இணை பார்ட்னர்ஷிப் முறையில் 100 ரன்களைக் கடந்தது.
இதன்மூலம் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 73 ரன்களுடனும், புஜாரா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
Cheteshwar Pujara (41*) and Rishabh Pant (73*) have carried India to lunch 🇮🇳💪
— ICC (@ICC) January 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The partnership between the duo is now worth 104 runs 🔥
What are your predictions for the coming session? 👀#AUSvIND pic.twitter.com/N4AqGq1MSa
">Cheteshwar Pujara (41*) and Rishabh Pant (73*) have carried India to lunch 🇮🇳💪
— ICC (@ICC) January 11, 2021
The partnership between the duo is now worth 104 runs 🔥
What are your predictions for the coming session? 👀#AUSvIND pic.twitter.com/N4AqGq1MSaCheteshwar Pujara (41*) and Rishabh Pant (73*) have carried India to lunch 🇮🇳💪
— ICC (@ICC) January 11, 2021
The partnership between the duo is now worth 104 runs 🔥
What are your predictions for the coming session? 👀#AUSvIND pic.twitter.com/N4AqGq1MSa
இருப்பினும் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு இன்னும் 201 ரன்கள் தேவை என்பதால், இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரிலிருந்து ஜடேஜா விலகல்?