ETV Bharat / sports

Ind vs Aus: தேசிய கீதத்திற்கு கண்கலங்கிய சிராஜ்! - 3ஆவது டெஸ்ட் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது இந்தியாவின் தேசிய கீதத்திற்கு முகமது சிராஜ் கண்கலங்கிய சம்பவம் காண்போரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ind vs Aus: Jaffer, Kaif hail Siraj for commitment towards representing country

author img

By

Published : Jan 7, 2021, 2:23 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (ஜன.07) தொடங்கியது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கமான ஒன்று.

அதன்படி இன்று இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கையில் வேகப்பந்து பந்துவீச்சாளர் முகமது சிராஜ், தன்னை மீறி கண் கலங்கினார். பின்னர் கைகளால் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட சிராஜ் உற்சாகமாக விளையாடத் தொடங்கினார்.

இந்நிலையில் தேசிய கீதத்திற்கு கண்கலங்கிய சிராஜின் காணொலி சமூக வலைதளங்களில் வைராலகத் தொடங்கியது. தாய்நாடு மீதான பற்றை இந்த சம்பவம் பறைசாற்றுவதாக பலரும் சிராஜுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், முகமது சிராஜின் இந்த புகைப்படத்தை சிலர் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

  • Even if there's little or no crowd to cheer you on, no better motivation than playing for India. As a legend once said "You don't play for the crowd, you play for the country." 🇮🇳 #AUSvIND pic.twitter.com/qAwIyiUrSI

    — Wasim Jaffer (@WasimJaffer14) January 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டர் பதிவில், உங்களை உற்சாகப்படுத்த கூட்டம் குறைவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்தியாவுக்காக விளையாடுவதைவிட சிறந்த உத்வேகம் வேறொன்றுமில்லை. ஒரு ஜாம்பவான் கூறியதுபோல் "நீங்கள் கூட்டத்திற்காக விளையாட வேண்டாம், நீங்கள் நாட்டுக்காக விளையாடுங்கள்" என்பதற்கான சிறந்த உதாரணம் இது என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கங்குலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.