ETV Bharat / sports

IND vs AUS: பத்தாவது முறையாக வார்னரை வீழ்த்திய அஸ்வின்! - ரவிச்சந்திரன் அஸ்வின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரின் விக்கெட்டை இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்தாவது முறையாக கைப்பற்றினார்.

IND vs AUS: Ashwin dismisses Warner for 10th time in Tests

author img

By

Published : Jan 9, 2021, 12:15 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள அஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களாக வில் புகோவ்ஸ்கி - டேவிட் வார்னர் இணை களமிறங்கியது.

இதில் டேவிட் வார்னர் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக இடக்கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் (193) படைத்துள்ளார். இப்பட்டியலில் இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 191 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், டேவிட் வார்னரை பத்தாவது முறையாக வீழ்த்தியுள்ளார். மேலும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு எதிராக அதிகமுறை விக்கெட்டைக் கைப்பற்றியவர் என்ற மோசமான சாதனையில் வார்னர் முதலிடத்தில் உள்ளார்.

இப்பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்கை ஒன்பது முறையும், பென் ஸ்டோக்ஸை ஏழு முறையும் ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிப்ரவரியில் தொடங்குகிறது பிஎஸ்எல் சீசன் 6!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.