ETV Bharat / sports

'26 பேர் கொண்ட அணியாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்' - எம்எஸ்கே பிரசாத் - ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா

டெல்லி: 14 நாள்கள் கட்டாயமாக வீரர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நடைமுறை இருப்பதால் 26 பேர் அடங்கிய மிகப் பெரிய குழுவாக இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

India cricket team
இந்திய கிரிக்கெட் அணியினர்
author img

By

Published : Jul 25, 2020, 5:56 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு வரும் டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு 14 நாள்கள் வீரர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் 26 பேர் அடங்கிய மிகப் பெரிய குழுவாக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

இந்தியா மற்றும் இந்தியா ஏ அணியைச் சேர்ந்த வீரர்களும் இணைந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்ய வேண்டும். இதனால் ஒரு மாத காலம் வரை இரு அணியினர் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு அமையும். அத்துடன் அணி நிர்வாகமும் அணிக்குத் தேவையான தகுதிவாய்ந்த இளம் வீரர்களை கண்டறியும் சூழலும் அமையும். 26 வீரர்களை அழைத்துச் செல்வதால் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடலாம்.

பேட்ஸ்மேன்களுக்கு வழக்கமான பவுலர்கள் பந்து வீசுவதும் தவிர்க்கப்படும். இதனால் அவர்கள் திறன்களை மாற்று வீரர்களின் பங்களிப்புடன் மேம்படுத்திக் கொள்ள உதவும் வாய்ப்பு ஏற்படுகிறது. அத்துடன் மாற்று பேட்ஸ்மேன், பவுலர்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளலாம்.

தற்போதைக்குப் பெரிய அளவிலான உள்ளூர்ப் போட்டிகள் இல்லாததால், இதனைச் செயல்படுத்தலாம். அதே சமயம் அதிக அளவிலான வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்பது சவாலான விஷயமாக இருக்கும். இருப்பினும், இதன்மூலம் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகையிலான போட்டிகளுக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்யலாம்

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் வரும் செப்டம்பர் முதம் நவம்பர் வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்த சீசனுக்கான பிரீமியர் லீக் போட்டிகள் செப்.12 முதல் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.