பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜன.17) தொடங்கியது. இதில் 307 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா 25 ரன்களிலும், கேப்டன் ரஹானே 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வாலும் 38 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்குத் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - வாஷிங்டன் சுந்தர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பந்த், ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து, வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்கூர் தனது முதல் ரன்னை சிக்சர் அடித்து தொடங்கினார். தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விளாசியது.
-
The partnership between Washington Sundar and Shardul Thakur is worth 59* runs – the highest by an India pair for the seventh wicket in Tests at the Gabba 🙌#AUSvIND ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/YosCiRoCbP
— ICC (@ICC) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The partnership between Washington Sundar and Shardul Thakur is worth 59* runs – the highest by an India pair for the seventh wicket in Tests at the Gabba 🙌#AUSvIND ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/YosCiRoCbP
— ICC (@ICC) January 17, 2021The partnership between Washington Sundar and Shardul Thakur is worth 59* runs – the highest by an India pair for the seventh wicket in Tests at the Gabba 🙌#AUSvIND ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/YosCiRoCbP
— ICC (@ICC) January 17, 2021
மேலும், இந்த இணை பார்ட்னர்ஷிப் முறையில் 59 ரன்களை எடுத்ததன் மூலம், கபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 7 விக்கெட்டில் இணை சேர்ந்து அதிக ரன்களை அடித்த முதல் ஜோடி என்ற சாதனையையும் வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தக்கூர் இணை படைத்தது.
இதன் மூலம் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடனும், ஷர்துல் தாக்கூர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
An unbeaten 67-run stand between Washington Sundar and Shardul Thakur takes India to 253/6 at tea on day three.#AUSvIND ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/jYvlOY9905
— ICC (@ICC) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An unbeaten 67-run stand between Washington Sundar and Shardul Thakur takes India to 253/6 at tea on day three.#AUSvIND ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/jYvlOY9905
— ICC (@ICC) January 17, 2021An unbeaten 67-run stand between Washington Sundar and Shardul Thakur takes India to 253/6 at tea on day three.#AUSvIND ⏩ https://t.co/oDTm20rn07 pic.twitter.com/jYvlOY9905
— ICC (@ICC) January 17, 2021
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் இறுதி செஷனை விளையாடவுள்ளது.
இதையும் படிங்க: Pak vs SA: கராச்சி சென்றடைந்தது டி காக் & கோ!