பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று (ஜன.15) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கம் தந்தது. இதில் இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் மறுமுனையில் நிதானமாக விளையாடிய மார்கஸ் ஹாரிஸ், ஐந்து ரன்கள் எடுத்திருந்தபோது இந்த இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ரன்களுக்குள்ளாகவே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினர். இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்துள்ளது.
-
Australia respond well after a fiery start from India.
— ICC (@ICC) January 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Who do you think is on top at lunch?#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/cX8o9Pp3Xx
">Australia respond well after a fiery start from India.
— ICC (@ICC) January 15, 2021
Who do you think is on top at lunch?#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/cX8o9Pp3XxAustralia respond well after a fiery start from India.
— ICC (@ICC) January 15, 2021
Who do you think is on top at lunch?#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/cX8o9Pp3Xx
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 30 ரன்களுடனும், மார்னஸ் லபுசாக்னே 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், நவ்தீவ் சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: “கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” - டிம் பெய்ன்!