ETV Bharat / sports

''நான் ரெடி'' தேர்வுக்குழுவினருக்கு அடித்துக் காட்டி சிக்னல் கொடுத்த ஹர்திக்! - ஹர்திக் காயம்

டிவொய் பாட்டீஸ் டி20 கோப்பைத் தொடரில் ரிலையன்ஸ் 1 அணிக்காக களமிறங்கி ஹர்திக் பாண்டியா 39 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து தனது உடற்தகுதியை தேர்வுக் குழுவினருக்கு நிரூபித்துள்ளார்.

if-its-in-my-arc-i-back-myself-pandya-after-smashing-39-ball-105

author img

By

Published : Mar 3, 2020, 9:15 PM IST

டிவொய் பாட்டீஸ் டி20 கோப்பைத் தொடர் மும்பையில் நடந்துவருகிறது. இதில் ரிலையன்ஸ் 1 அணியை எதிர்த்து சிஏஜி அணி ஆடியது. இதில் ரிலையன்ஸ் 1 அணிக்காக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.

இதில் ஹர்திக் பாண்டியா 39 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 105 ரன்களை விளாசியுள்ளார். அதில் 8 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும். ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் ரிலையன்ஸ் 1 அணி 20 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது.

இந்த ஆட்டம் குறித்து ஹர்திக் பேசுகையில், '' கிரிக்கெட்டிலிருந்து விலகி 6 மாதங்கள் ஆகிவிட்டன. அறுவை சிகிச்சைக்கு பிறகு இந்தத் தொடரில் களமிறங்கி ரன்கள் குவித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது உடல் திறனை சோதிப்பதற்கும் நல்ல களமாக இந்தத் தொடர் அமைந்துள்ளது'' என்றார்.

இந்தத் தொடரில் பேங்க் ஆஃப் பரோடா அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கியபோது 25 பந்துகளை எதிர்கொண்ட ஹர்திக் 38 ரன்கள் எடுத்திருந்தார்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா, 6 மாதங்களாக கிரிக்கெட்டிலிருந்து விலகி ஓய்வில் இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த சோதனையில் ஹர்திக் பூரண குணமடையாதது தெரியவந்தது.

பின்னர் மீண்டும் ஓய்வில் இருந்த ஹர்திக் இந்தத் தொடரில் களமிறங்கி, இந்திய அணியில் ஆடுவதற்கு தயார் என சிக்னல் கொடுத்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கெத்தா நடந்துவர்றான்...! - சென்னையில் 'தல தோனி'யின் தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.