இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஜடேஜா சேர்ப்பு?
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர ரவீந்திர ஜடேஜா, முழு உடற்தகுதியைப் பெற்றால் ஹனுமா விஹாரிக்கு பதிலாக அணியில் சேர்க்கபடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜா முழு உடற்தகுதியை பெற்றால், நிச்சயமாக அவர் ஹனுமா விஹாரிக்கு பதிலாக அணியில் சேர்க்கப்படுவார். மேலும் மெல்போர்னில் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குவது உறுதி என தெரிவித்துள்ளார்.
ஜடேஜா காயம்
முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டி20 போட்டியின் போது ரவீந்தி ஜடேஜா தலையில் கயமடைந்து, போட்டியில் பாதியிலேயே வெளியேறினார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததால், அவர் டி20 தொடரிலிருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடராஜனுக்கு வாய்ப்பு
அதேசமயம் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும், டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக நேற்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா தொடரின் போது சிறப்பாக செயல்பட்ட அறிமுக பந்துவீச்சாளர் நடராஜனுக்கு, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்கபடும் என்ற பேச்சுகளும் அடிபட்டு வருகிறது.
ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிவுள்ள நடராஜன், டெஸ்ட் போட்டிகளிலும் தனது திறனை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பிரிட்டீஷ் பிரீமியர் லீக் : வெற்றியுடன் தொடங்கிய முர்ரே!