விளையாட்டில் சீண்டல்கள் இல்லாமல் இருக்காது. சில நேரங்களில் சின்ன சின்ன சீண்டல்கள் ரசிகர்களிடையே போட்டியை சுவாரஸ்யமாக்கும். ஆனால் அந்த சீண்டல்கள் அதிகமானால் வீரர்கள் மீது ரசிகர்களுக்கு கோபம் அதிகமாகும். கிரிக்கெட்டில் சீண்டல்கள் நடப்பது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். ஆனால் அது எப்போதும் அடிதடியில் முடியாது. போட்டி முடிவடைந்த பின் சீண்டல்களில் ஈடுபட்ட வீரர்கள் கைகுலுக்கி ஸ்பிரிட் ஆஃப் தி கேமை காப்பாற்றுவார்கள்.
ஆனால் நேற்று நடந்த யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களை தொடக்கம் முதலே வங்கதேச வீரர்கள் சீண்டிக்கொண்டே இருந்தனர். ஆனால் அந்த சீண்டல் இரண்டாவது ஓவரின் போதே சிறிதளவு எல்லை மீறியது. திவ்யன்ஷ் சக்சேனாவை வங்கதேச பந்துவீச்சாளர் வம்புக்கு இழுக்க, நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் விக்கெட்டை வீழ்த்தியபோது, வரம்பு மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்திய வீரர்கள் பந்துவீச்சின் போது வங்கதேசத்தின் சீண்டல்களுக்கு பதில் கொடுக்க, ஆட்டத்தில் பொறி பறந்தது. இறுதியாக வங்கதேசம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அப்போது மைதானத்திற்குள் ஒடிவந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை ஒருமையில் பேசத் தொடங்கினர். வங்கதேச வீரர் இஸ்லாம் இந்திய வீரர்களை ஒருமையில் பேசியது கேமராவிலேயே பதிவாகியது.
-
Shameful end to a wonderful game of cricket. #U19CWCFinal pic.twitter.com/b9fQcmpqbJ
— Sameer Allana (@HitmanCricket) February 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shameful end to a wonderful game of cricket. #U19CWCFinal pic.twitter.com/b9fQcmpqbJ
— Sameer Allana (@HitmanCricket) February 9, 2020Shameful end to a wonderful game of cricket. #U19CWCFinal pic.twitter.com/b9fQcmpqbJ
— Sameer Allana (@HitmanCricket) February 9, 2020
இதற்கெல்லாம் உச்சமாக இந்திய வீரர்களுடன் வங்கதேச வீரர்கள் அடிதடியில் ஈடுபட்டது ரசிகர்களிடையே கோபத்தை வரவழைத்தது. இதுபோன்ற செயல்களால் விளையாட்டின் மகத்துவம் கெடுவதுடன், ரசிகர்களின் வெறுப்பையும் அந்த வீரர்களும், நாடும் சம்பாதிக்கும்.
இதுகுறித்து வங்கதேச கேப்டன் அக்பர் அலி பேசுகையில், '' எங்கள் அணியில் சிலர் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தனர். ஆட்டத்திற்கு பின் நடந்தது, யாரும் எதிர்பாராதது. இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்'' என்றார்.
சமீக மாதங்களாக வங்கதேச கிரிக்கெட்டில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டவந்த நிலையில், ஜூனியர் உலகக் கோப்பை வென்று சரித்திரம் படைத்தது. இதனால், அந்த அணி புதிய பாதையை நோக்கி பயணிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்திய வீரர்களுடன் வங்கதேச வீரர்கள் நடந்துகொண்ட விதம் வங்கதேச அணிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யு19 உலகக் கோப்பை ஃபைனல்: சரித்திரம் படைத்த வங்கதேசம்... போராடித் தோற்ற இந்தியா!