ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்த ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடக்குமா அல்லது தள்ளி வைக்கப்படுமா குறித்து ஐசிசி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த டி20 உலக்கோப்பை தொடர் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் குறித்த முடிவை ஐசிசி அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.