ETV Bharat / sports

டெஸ்ட் தரவரிசை : ஸ்மித், கோலியை பின்னுக்குத் தள்ளிய வில்லியம்சன்! - ரவிச்சந்திரன் அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (டிச.31) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ICC Test Rankings: Williamson overtakes Smith and Kohli to become No.1

author img

By

Published : Dec 31, 2020, 12:57 PM IST

டிசம்பர் 26ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்-நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா-இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பாகிஸ்தான் அணிக்கெதிராக சதமடித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 890 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். அதேசமயம் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 877 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டார்.

இப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 879 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார். மேலும் இந்திய அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே ஐந்து இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 906 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு இடங்கள் முன்னேறி 7ஆம் இடத்தையும், ஜஸ்பிரிட் பும்ரா ஒரு இடம் முன்னேறி 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டர் இரண்டாம் இடத்தையும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: லாலிகா: ரியல் மாட்ரிட் - எல்ச் எஃப்சி ஆட்டம் டிரா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.