ETV Bharat / sports

கோலியை முந்தி முதலிடத்தைப் பிடித்த ஸ்மித்!

டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ICC Test rankings: Steve Smith displaces Virat Kohli to become No.1

author img

By

Published : Feb 26, 2020, 6:35 PM IST

இன்று ஐசிசி சர்வதேச டெஸ்ட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய மோசமான ஃபார்ம் காரணமாக இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல் இரண்டாமிடலித்திருந்த ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்றாமிடத்திலிருந்த ஆஸ்திரேலிய அணியின் லபுசாக்னே நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தப்பட்டியலில் இந்திய அணியின் ரஹானே ஒரு இடம் முன்னேறி எட்டாம் இடத்திலும், புஜாரா ஒன்பதாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரு இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தைப்பிடித்து அசத்தியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இதில் நியூசிலாந்து அணியின் டிம் சவுதி எட்டு இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலின் டாப் 10-க்குள் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியரும் அவர்தான்.

இதையும் படிங்க:பரபரப்பான ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் தோல்வியிலிருந்து மீண்ட சென்னையின் எஃப்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.