ETV Bharat / sports

ஜெட் வேகத்தில் முன்னேறிய ரோஹித்; டாப்-10இல் இடம்பிடித்த அஸ்வின்! - jadeja five for

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ரோஹித் 17ஆவது இடத்திலும், முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் டாப்-10லும் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.

ரோஹித்
author img

By

Published : Oct 7, 2019, 10:43 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, மயாங்க் அகர்வால், ஜடேஜா, அஸ்வின், ஷமி, புஜாரா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

இந்த போட்டி முடிவடைந்த நிலையில், டெஸ்ட் வீரர்களுக்கு ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா 36 இடங்கள் முன்னேறி 17ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல் இரட்டை சதம் விளாசிய மயாங்க் அகர்வால் 38 இடங்கள் முன்னேறி 25ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

அஸ்வின்
அஸ்வின்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 14ஆவது இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தை பிடித்துள்ளார். இரண்டாது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட் என புகழ்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் ஷமி 16ஆவது இடத்தில் இருக்கிறார்.

பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மாடர்ன் டே பிராட்மேன் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிக்கலாமே: #HappyBirthdayZaheerKhan: 90ஸ் கிட்ஸ்களின் பவுலிங் ஹீரோ ஜாகிர் கான் ❤

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.