நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. மூன்றாவது போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசலில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சென்றிருந்தபோது துப்பாக்கிசூடு சம்பவம் நடந்துள்ளது. அதிலிருந்து நூலிலையில் வீரர்கள் உயிர் தப்பி, தற்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பலரும் உயிரிழந்துள்ளதால், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு நலன் கருதி டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன், இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்த முடிவினை ஐசிசி முழுமையாக ஆதரிக்கிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு கண்டனத்தையும் பதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.