ETV Bharat / sports

ஐசிசி தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது: ஐசிசி! - டி20 உலகக்கோப்பை

துபாய்: ஐசிசி தலைவர் பதவிக்காலத்தை நீட்டிக்க ஷாஷங்க் மனோகர் விரும்பவில்லை என ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.

icc-chairman-shashank-manohar-not-seeking-extension-will-support-board-to-ensure-smooth-transition

author img

By

Published : May 28, 2020, 12:36 PM IST

ஐசிசி தலைவராக உள்ள ஷாஷங்க் மனோகரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ளது. இதனால் அடுத்த ஐசிசி தலைவராக யார் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. தேர்தல் குறித்த ஐசிசி என்ன முடிவு செய்துள்ளது, கரோனா வைரஸ் பாதிப்பால் ஷாஷங்க் மனோகரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஐசிசி தேர்தல் பற்றி இதுவரை எந்தவித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதனைப் பற்றி இன்று நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். தற்போது ஐசிசி தலைவராக இருக்கும் ஷாஷங்க் மனோகர் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை. அதனால் நிர்வாகத்திற்கு அடுத்த தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருக்கு உரிய ஆதரவு வழங்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் அடுத்த தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் காலின் கிரேவ்ஸ் வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டால் தோனியின் எதிர்காலம் முடிவுக்கு வருமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.