இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, சக வீரரான பும்ராவை சிறந்த பவுலர் என பலமுறை பாராட்டியுள்ளார். அதேபோல, கோலி சிறந்த பேட்ஸ்மேன் என பும்ராவும் கோலியை புகழ்ந்துள்ளார். இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களை சேர்த்தது. இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்துள்ளது. இப்போட்டியில், இந்திய பந்துவீச்சாளர் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து அசத்தலான பந்துவீசிய அவர், இதுவரை ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
குறிப்பாக, அவரது பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான ஜான் காம்பெல், ரிஷப் பண்ட் வசம் கேட்ச் தந்து ஆவுட்டானார். பும்ராவின் பந்துவீச்சைக் கண்டு பிரமித்த கோலி, ’மனுஷன் என்ன மாதிரி பவுலிங் போட்றான் பாருயா’ என ரசிகனை போல் கத்திய வீடியோ ஸ்டெம் மைக்கில் பதிவாகியுள்ளது. (What a bowler man, What a bowler)
இது ஒருபுறம் இருக்க, பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுக்க முக்கிய காரணமே கோலிதான். ஆம், பும்ரா வீசிய பந்து ரோஸ்டன் சேசின் காலில் பட்டதும் மற்ற வீரர்கள் எல்லாம் எல். பி. டபள்யூ-விற்கு அப்பிள் செய்தனர். ஆனால், நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார்.
அதேசமயம், பும்ராவும் பெரிதாக அப்பில் செய்யாமல் இருந்தாலும், பந்து ஸ்டெம்பை தாக்கியிருக்கும் என்ற நம்பிக்கையில் கோலி ரிவ்யூ எடுத்தார். ரிவ்யூவில் பந்து ஸ்டெம்பை தாக்கியதால் நடுவர், ரோஸ்டான் சேஸ் அவுட் என கையை உயர்த்த பும்ரா ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார்.
ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது குறித்து பும்ரா கோலியிடம் கூறுகையில்,
"ரோஸ்டன் சேசின் பேட்டில் பந்து பட்டிருக்கும் என்று நினைத்ததால், நான் அப்பில் செய்யவில்லை. ஆனால், கோலி ரிவ்யூ எடுத்தது எனக்கு சாதகமாக அமைந்தது. அதனால், நான் இந்த ஹாட்ரிக் எடுக்க கோலிதான் காரணம். அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.
-
I owe my hat-trick to you – Bumrah tells @imVkohli @Jaspritbumrah93 became the third Indian to take a Test hat-trick. Hear it from the two men who made it possible 🗣️🗣️
— BCCI (@BCCI) September 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Full video here ▶️📹https://t.co/kZG6YOOepS - by @28anand #WIvIND pic.twitter.com/2PqCj57k8n
">I owe my hat-trick to you – Bumrah tells @imVkohli @Jaspritbumrah93 became the third Indian to take a Test hat-trick. Hear it from the two men who made it possible 🗣️🗣️
— BCCI (@BCCI) September 1, 2019
Full video here ▶️📹https://t.co/kZG6YOOepS - by @28anand #WIvIND pic.twitter.com/2PqCj57k8nI owe my hat-trick to you – Bumrah tells @imVkohli @Jaspritbumrah93 became the third Indian to take a Test hat-trick. Hear it from the two men who made it possible 🗣️🗣️
— BCCI (@BCCI) September 1, 2019
Full video here ▶️📹https://t.co/kZG6YOOepS - by @28anand #WIvIND pic.twitter.com/2PqCj57k8n
விராட் கோலி பும்ராவின் பந்துவீச்சை ரசிகன் போல் பாராட்டியதும், பும்ரா கோலிக்கு கடமைப்பட்டிருப்பதாக கூறுவதும் இருவருக்குள் இருக்கும் 'ப்ரோமேன்சை' (Bromance) காட்டியிருப்பதாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.