இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்பொர்னில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
'அஸ்வினுடன் ஒப்பிடாதீர்'
இதற்கிடையே செய்தியாளர்களிடம் கூறிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், "அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவரிடமிருந்த நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அதிலும் இந்திய சுற்றுப்பயணத்தின்போது அவரிடமிருந்து பல்வேறு நுணுக்கங்களை நான் கற்றறிந்துள்ளேன். இருப்பினும், அவர் என்னைவிட சிறப்பான பந்தவீச்சாளர். பல நுணுக்கங்களை அவர் கையாளுவார்.
நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான பந்துவீச்சு திறனை கொண்டிருந்தாலும், எங்களுக்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதனால் நானே அவருடன் என்னை ஒப்பிட மாட்டேன். ஏனேனில் அவருடைய சாதனைகளே அவரைப் பற்றி கூறும். அஸ்வினுக்கு நான் தலைவணங்குகிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏழை மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் கிரிக்கெட் பயிற்சியாளர்!