இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக நாளை அடிலெய்டில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இதற்கிடையில் பிசிசிஐயின் காணொலி உரையாடலில் பங்கேற்ற கோலியிடம் ‘உங்களது ஆக்ரோஷமான பண்பு ஆஸ்திரேலியர்களை போன்று உள்ளதென அந்த அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் தெரிவித்தது குறித்த உங்களது கருத்து என்ன?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கோலி, “நான் எப்போதும் என்னுடைய மனநிலையில் உறுதியாக இருந்தேன். ஏனெனில் புதிய இந்தியாவின் பிரதிநிதியாக என்னை கருதுகிறேன். என் மனதில் இந்திய கிரிக்கெட் அணியாக நாங்கள் எப்படி முன்னேறத் தொடங்கினோம் என்ற எண்ணம் எப்போதும் உள்ளது. நான் தலைமை ஏற்ற நாளிலிருந்தே அதனை செய்துவருகிறேன்.
ஒவ்வொரு நாளும் எனது தலைமையிலான இந்திய அணி புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. எங்கள் வழியில் வரும் சவால்களை நாங்கள் எதிர்கொள்ள எப்போதும் தயாராகவே இருந்துவருகிறோம். அதுபோலவே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரையும் எதிர்நோக்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும்: ட்விட்டரில் மோதிக்கொள்ளும் சர்வதேச மல்யுத்த வீரர்கள்!