ETV Bharat / sports

'நான் தயார்' மிஸ்பாவிடம் கூறிய வஹாப் ரியாஸ்...!

எனது தேவை அணிக்கு வேண்டுமென்றால் டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தயாராக இருப்பதாக பாக். வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் பயிற்சியாளர் மிஸ்பாவிடம் தெரிவித்துள்ளார்.

i-am-ready-to-return-for-test-series-in-england-wahab-riaz-tells-pak-head-coach-misbah

author img

By

Published : Jun 13, 2020, 8:30 PM IST

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அணியிலிருந்து முகமது ஆமிர், ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

வஹாப் ரியாஸ்
வஹாப் ரியாஸ்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து சில காலம் விலகியிருந்த வஹாப் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது பற்றி பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்கிடம் கேட்கையில், ''இங்கிலாந்து சுற்றுப்பயணம் பற்றி வஹாப்பிடம் பேசினேன். எனது தேவை அணிக்கு வேண்டும் என்று நினைத்தால், நான் தயாராக உள்ளேன் என்றார். அதனால் தான் 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் அவருக்கு இடம்கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்திற்கு ஐந்து வாரங்கள் முன்னமே செல்வதால் வீரர்கள் தயாராக நேரம் உள்ளது. மூன்று மாதங்கள் இடைவெளிக்கு பின் ஒரு பந்துவீச்சாளர் சரியான ரிதமில் வீசுவது எளிதல்ல. அதற்காக தான் பத்து வேகப்பந்துவீசசாளர்கள், நான்கு சுழற்பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.