கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு பிடித்தமான செயல்களில் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர்.
அந்த வரிசையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன்னை சுய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும் அவர், அவ்வபோது தனக்கு பிடித்தமான செயல்களை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தனக்கு அனைத்து சமயங்களிலும் பிடித்த செயல்’ என பதிவிட்டு, குதிரை சவாரி செய்யும் காணொலியை இணைத்துள்ளார். இதற்கு முன்னதாக தனக்கு ஓடுவது மிகவும் பிடித்தது என்ற காணொலியையும் அவர் பதிவிட்டிருந்தார். தற்போது இக்காணொலிகளை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
-
My all time favourite 🐎 pic.twitter.com/DjQWAP6Cze
— Ravindrasinh jadeja (@imjadeja) March 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My all time favourite 🐎 pic.twitter.com/DjQWAP6Cze
— Ravindrasinh jadeja (@imjadeja) March 31, 2020My all time favourite 🐎 pic.twitter.com/DjQWAP6Cze
— Ravindrasinh jadeja (@imjadeja) March 31, 2020
இதையும் படிங்க:கொட்டும் பனியிலும் பயிற்சியை மேற்கொள்ளும் ஃபெடரர்
!