தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா. இவர் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் இத்தொடரில் 30 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபருக்கான ஊதா தொப்பியையும் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இடம்பெற்றுள்ள ரபாடா, ஐபிஎல் தொடரில் செய்ததைப் போலவே எனது அணிக்கும் உதவுவேன் என்று தெரிவித்தூள்ளார். ‘
இதுகுறித்து பேசிய ரபாடா, "இங்கிலாந்து அணியுடனான தொடரில் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் ஐபிஎல் தொடரில் செய்ததைப் போலவே எனது அணிக்கும் உதவ முயற்சித்து வருகிறேன். மேலும் ஐபிஎல் தொடர் தந்த ஊக்கமானது இரு அணி வீரர்களுக்கும் உதவுகிறது.
அதிலும் இங்கிலாந்து அணியின் பட்லர், பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ், மோர்கன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் எவ்வாறு செயல்பட்டனரோ, அதுபோலவே இத்தொடரிலும் விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களை சமாளிப்பது சவாலாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது" குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’பாக்., அணியின் நீண்ட கால கேப்டனாக பாபர் அசாம் நீடிப்பார்’ - வாசிம் கான்