ETV Bharat / sports

பும்ராவை பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள்! - ஜஸ்ப்ரிட் பும்ரா

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சு ஜாம்பவான்கள் ஆண்டி ராபர்ட்ஸ் மற்றும் கர்ட்லீ அம்ரோஸ் இந்திய வேகபந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவின் சாதானையை பாராட்டியுள்ளனர்.

jasprit bumrah
author img

By

Published : Aug 28, 2019, 10:05 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகபந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன்மூலம் குறைந்த ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுக்கும் மேல் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் 11 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார். சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

ஆண்டி ராபர்ட்ஸ் மற்றும்  கர்ட்னி வால்ஷ்
ஆண்டி ராபர்ட்ஸ் மற்றும் கர்ட்னி வால்ஷ்

இந்நிலையில் பும்ராவின் சாதனையைக் கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சு ஜாம்பவான் அம்ரோஸ் கூறுகையில், " அவருடைய வேகம், பந்துவீசும் திறன், அவர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் விதம் ஆகியவை மிகச்சிறப்பு வாய்ந்தது. அவர் எந்த சூழ்நிலைகளிலும் விளையாடும் திறம்படைத்தவர்” என பாராட்டியுள்ளார்.

மேலும் மற்றொரு ஜாம்பவான் ராபர்ட் கூறுகையில், ”பும்ரா ஒரு அசாத்திய பந்துவீச்சாளர். அவரின் பந்துவீசும் முறையை போல் வேறு எவரும் பந்து வீசக் கண்டத்தில்லை, இருப்பினும் அதைப்பற்றி ஆரய்ந்த்து வருகிறேன். அவரின் பந்துவீச்சு துள்ளியமாகவும், இடத்திற்கு ஏற்றார் போல் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார். அதேபோல் கர்ட்னி வால்ஷும் பும்ராவின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளதெனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.