கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டது. இதையடுத்து சில புகைப்படங்கள் வெளியிட்ட கபில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆச்சரியமளிக்கும்விதமாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், ''அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரும். உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. நான் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இதயம் நன்றாக உள்ளது. ஆனால் நான் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் கூற விரும்புகிறேன்.
-
Happy Diwali pic.twitter.com/QFRPs8UHy1
— Kapil Dev (@therealkapildev) November 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Diwali pic.twitter.com/QFRPs8UHy1
— Kapil Dev (@therealkapildev) November 13, 2020Happy Diwali pic.twitter.com/QFRPs8UHy1
— Kapil Dev (@therealkapildev) November 13, 2020
கிரிக்கெட் மைதானத்திலும் சரி, கோல்ஃப் மைதானத்திலும் சரி... நீண்ட நாள்களுக்குப் பின் களமிறங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கோல்ஃப் மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க்கை என்பது இதற்காகத்தான்'' என்றார். இந்தக் காணொலி கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ”ஐபிஎல் அணிகளை அதிகப்படுத்த வேண்டிய நேரம் இது” - ராகுல் டிராவிட்