2010ஆம் ஆண்டு முதல்முறையாக ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தத் தொடரில் ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத சம்பவங்கள் இருந்தாலும், அப்போது தொடக்க வீரராக இருந்த ஹெய்டன் பயன்படுத்திய மங்கூஸ் பேட் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
பேட்டின் கைப்பிடி நீண்டதாகவும், பேட் சிறியதாகவும் காட்சியளிக்கும் மங்கூஸ் பேட்டை வைத்து ஹெய்டன் 43 பந்துகளில் 93 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்த பேட்டை பயன்படுத்த வேண்டாம் என ஹெய்டனுக்கு சென்னை அணியின் கேப்டன் தோனி அறிவுரை வழங்கியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ‘
அந்த நேர்காணலில், ''நான் உங்களுக்கு தேவையான எதை வேண்டுமானாலும் தருகிறேன். இந்த பேட்டை மட்டும் பயன்படுத்தாதீர்கள். தயவு செய்து கேட்கிறேன் '' என தோனி அறிவுரை வழங்கியதாக ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஹெய்டன், ''நான் இந்த பேட்டை வைத்துதான் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த பேட்டை வைத்து பந்தை அடித்தால் 20மீ வரை பந்து இன்னும் தூரமாக செல்கிறது. அதனால் பயன்படுத்தினேன். நான் பயன்படுத்தியது வரை அந்த பேட் எனக்கு மிகவும் உதவியாகவே இருந்தது'' என்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மங்கூஸ் பேட் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரைவ் ஷாட் ஆடுவது எப்படி? இன்ஸ்டாவில் டிப்ஸ் வழங்கும் ஸ்டீவ் ஸ்மித்