கரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளாது. இதனால் விளையாட்டு வீரர்கள் முழு நேரமாக தங்களது சமூகவலைதள பக்கங்களில் உலாவி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி, இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில், விராட் கோலியிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விராட் கோலியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய நெறிமுறைகள் மற்றும் செயல்பாடுகள்தான். அவரிடன் நான் அதனை நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். மேலும் நான் எனது அணிக்காக எதையும் செய்வேன். நான் எப்போதெல்லாம் இந்திய அணிக்காக களமிறங்குகிறேனோ, அப்போது நான் என்னால் முடிந்த அளவு ரன்களை சேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளேன்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை எனக்கு கிடையாது. என்னால் என்ன செய்ய இயலும் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அதனால் நான் என்னுடைய விளையாட்டையே தொடர்ந்து விளையாடுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக அறியப்படும் விஹாரி, கடந்த ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் ரூ.2 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகை ஒன்றிணைக்க ஒலிம்பிக்ஸ் சிறந்த வாய்ப்பு!