தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து இழிவாக பேசியிருந்தனர். இதனால், பெரும் விமர்சனங்களை சந்தித்த இவ்விரு வீரர்களுக்கும், பிசிசிஐ கிரிக்கெட் விளையாடுவதற்கு இடைக்கால தடை விதித்தது.
அதனைத்தொடர்ந்து, இவ்விரு வீரர்கள் மீதான தடையையும் பிசிசிஐ நீக்கியது. பெண்கள் குறித்தான தரக்குறைவான பேச்சிற்கு இருவரும் மன்னிப்பு கோரினர்.
தற்போது இவ்விரு வீரர்களும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், பெண்கள் குறித்து இழிவாக பேசிய குற்றத்திற்காக, இருவருக்கும் பிசிசிஐ தலா 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்ததுள்ளது.
இத்தொகையை, இருவரும் உயிரிழந்த 10 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் எனவும், பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக தலா ரூ. 10 லட்சம் ரூபாயையை தர வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இத்தொகையை இவர்கள் நான்கு வாரத்திற்குள் அளிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.