ETV Bharat / sports

'கடின உழைப்பே 200 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவியது' - காகிசோ ரபாடா

கடின உழைப்பும், விடா முயற்சியுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவியது என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

Hard and relentless work led to reaching 200 Test wickets: Rabada

author img

By

Published : Jan 30, 2021, 1:55 PM IST

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 26ஆம் தேதி கராச்சியில் தொடங்கியது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, ஹசன் அலியின் விக்கெட்டை வீழ்த்திய போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200ஆவது விக்கெட்டை பதிவு செய்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்காக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய எட்டாவது பந்துவீச்சாளர் என்ற சிறப்பையையும் பெற்றார்.

இதுகுறித்து பேசிய ரபாடா, "தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றிருப்பது ஒரு மகத்தான சாதனை. ஏனெனில் எப்போதும் விளையாடத் தொடங்கும் போது இது போன்ற சாதனைப் பட்டியல்களில் உங்களது பெயர் இடம்பெறவேண்டும் என்ற கனவு அனைவருக்கும் இருக்கும். எனக்கு அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

நான் எனது விளையாட்டில் எந்தவொரு மாயாஜாலத்தையும் நிகழ்த்தவில்லை. இது எனது கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் கிடைத்த சன்மானம். அதுவே என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவியது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: IND vs ENG போட்டிகள்: பயிற்சியை தொடங்கிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.