ETV Bharat / sports

'தளபதி' ஸ்டைலில் 'தல' சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி... - வைரலாகும் ஹர்பஜன் ட்வீட்! - IPL 2020

ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை அணியுடன் இணைந்ததை ஹர்பஜன் சிங் தனது ஸ்டைலில் ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

harbhajan-tweet-after-joining-csk
harbhajan-tweet-after-joining-csk
author img

By

Published : Mar 9, 2020, 9:51 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை அணி வீரர்கள் பலரும் இப்போதே சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியின் கேப்டன் 'தல' தோனி பயிற்சியில் ஈடுபடுவதால், ஒவ்வொரு நாளும் மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

இதனிடையே ட்விட்டர் புகழ் 'ஹர்பஜன் சிங்' சென்னை அணியுடன் இணைந்துள்ளார். ஹர்பஜன் சிங்கைப் பொறுத்தவரையில் களத்தில் கலக்குகிறாரோ இல்லையோ ட்விட்டரில் தனது ஸ்டையில் அசத்தி வருகிறார்.

இம்முறை சென்னை அணியுடன் இணைந்ததை அஜித், விஜய், ரஜினி, கமல் படங்களின் தலைப்பை வைத்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் சிஎஸ்கே ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அண்ணே... என் பேட்ட காணோம்ணே! இது என்னடா தமிழ் புலவருக்கு வந்த சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.