பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம் வருபவர் முகமது ஹபீஸ். இவர் இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் அணியான மிடில்செக்ஸ் அணிக்காக டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறர்.
இந்நிலையில், ஹபீஸின் பந்துவீச்சு குறித்து சர்ச்சை எழுந்த காரணத்தால் அவருக்கு மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சோதனையின் முடிவுகள் பந்துவீச்சு சர்ச்சையை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முகமது ஹபிஸுக்கு, இங்கிலாந்தில் நடைபெறும் எந்தவொரு உள்ளூர் போட்டிகளிலும் பந்துவீச அனுமதியளிக்கக் கூடாதென, தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ஹபீஸ் கூறுகையில், ”இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மறுஆய்வுக் குழுவால் இது சம்பந்தப்பட்ட அறிக்கைகளை நான் பெற்றுள்ளேன். இருப்பினும் இது எனது நற்பெயரை பாதிப்படைய செய்யும் என்பதை உணர்ந்தாலும், நான் இதனை ஏற்றுகொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஹபீஸ் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல, இதற்கு முன் 2005ஆம் ஆண்டு அவரின் பந்துவீச்சு குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து அவர் பலமுறை இதில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரிக்கெட்டின் அரசன் விராட் கோலி....!