2019ஆம் ஆண்டுக்கான குளோபல் டி20 தொடர் கனடாவின் ஒன்டாரியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், கிறிஸ் லின், டுமினி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த வின்னிபேக் ஹாக்ஸ் அணியும், ஆண்ட்ரே ரஸல் இருக்கும் வான்கோவர் நைட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வின்னிபேக் அணியின் தொடக்க வீரர் ஷாய்மன் அன்வரின் அதிரடியால் 20 ஓவர்களில் 192 ரன்களை அந்த அணி குவித்தது. இதில், அதிபட்சமாக ஷாய்மன் அன்வர் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என 92 ரன்கள் விளாசினார்.
இதைத் தொடர்ந்து, 193 ரன்கள் இலக்குடன் ஆடிய வான்கோவர் நைட்ஸ் அணி 7.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில், கேப்டன் சோயப் மாலிக் அதிரடியாக ஆட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. வான்கோவர் அணி 16.5 ஓவர்களில் 139 ரன்களை எடுத்திருந்த நிலையில், மாலிக் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர், 18 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடி வீரர் ரஸல் களமிறங்கினார். 18, 19 ஆவது ஓவர்களை எதிர்கொண்ட அவர், பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு மொத்தம் 36 ரன்களை சேர்த்தார். இதனால், கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது நோபால், சிக்சர், விக்கெட் என எதிர்பார்க்காத பல திருப்புமுனைகள் ஏற்பட்டது. ஆம், கலிம் சனா வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தை ரஸல் சிக்சர் அடிக்க, பின்னர் மூன்றாவது பந்தை கலிம் சனா நோபாலாக வீசினார். இதனால், ஃப்ரிஹிட் பந்தை ரஸல் மீண்டும் சிக்சருக்கு பறக்கவிட வான்கோவர் அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று பந்துகளில் மூன்று ரன் தேவைப்பட்டது.
ஆனால், அடுத்தடுத்த இரண்டு பந்தையும் ரஸல் வீணடிக்க கடைசி பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மூன்றாவது ரன் எடுக்க முயற்சித்தபோது நான் ஸ்ட்ரைக்கர் சஃபார் அவுட் ஆனார். இதனால், வான்கோவர் நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 192 ரன்களை எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. ரஸல் 20 பந்துகளில் 46 ரன்களை அடித்தார்.
இதைத்தொடர்ந்து, சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த வான்கோவர் நைட்ஸ் அணி ஒன்பது ரன் மட்டுமே எடுத்தது. ரஸல் ஒரு சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார்.
-
Watch what all happened in the super over of #GT2019 finale!#VKvsWH pic.twitter.com/J2ldmLlfnE
— GT20 Canada (@GT20Canada) August 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Watch what all happened in the super over of #GT2019 finale!#VKvsWH pic.twitter.com/J2ldmLlfnE
— GT20 Canada (@GT20Canada) August 13, 2019Watch what all happened in the super over of #GT2019 finale!#VKvsWH pic.twitter.com/J2ldmLlfnE
— GT20 Canada (@GT20Canada) August 13, 2019