இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மகேந்திர சிங் தோனியை தாண்டி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் அந்நிகழ்ச்சியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்துக்குதான் தன்னுடைய அணியில் வாய்ப்பளிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். தற்சமயம் அவரது பேட்டிங் திறமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளாதாக குறிப்பிட்ட அவர், இருப்பினும் அவர் அடுத்த ஆண்டு உலகக்கோப்பையில் பிரதிபலிப்பார் என்றார். மேலும் தனது அணியின் சிறந்த தேர்வாக அவரே உள்ளதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் தோனி அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்விக்கு, "நாம் தோனியை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களையும் பார்க்க வேண்டும், நீங்கள் உலகக்கோப்பை பற்றி பேசினால் நான் நிச்சயமாக ரிஷப் பந்த் பற்றி யோசிப்பேன்" என மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
மேலும் ரிஷப் பந்த் அந்த இடத்தை நிரப்பாத பட்சத்தில் சஞ்சு சாம்சன் அந்த இடத்துக்கு சரியான வீரராக வீரராக இருப்பார் எனவும் டி20 உலகக் கோப்பையைப் பற்றி சிந்திக்க வேண்டியிருந்தால் இளைஞர்களைப் பற்றி தான் சிந்திப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தோனி இந்திய கிரிக்கெட்டில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளதாக சொன்ன அவர், ஆனால் இப்போது அவரைத் தாண்டி பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
சுனில் கவாஸ்கரின் இந்தக் கருத்திற்கு இந்திய அணி ரசிகர்கள் இணையத்தில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க...!