இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி லேசான நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் ஜனவரி 27ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை அலுவலர் ஒருவர் கூறுகையில், "சௌரவ் கங்குலியின் உடல்நிலை சீராகவுள்ளதாகவும், மருத்துவ பரிசோதனைக்குப் பின், அவர் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்படக்கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நான்கு நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த சௌரவ் கங்குலி இன்று (ஜன.31) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சௌரவ் கங்குலி லேசான மாரடைப்பு காரணமாக கொல்கத்தா உட்லண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், இதயத்தின் ரத்தக் குழாயினை விரிவுப்படுத்துவற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தேர்வு!