ETV Bharat / sports

'ஐபிஎல் தொடர் நடைபெறுமென கங்குலி கூறியுள்ளது மகிழ்ச்சி' - இர்பான் பதான்!

author img

By

Published : Jun 17, 2020, 6:38 PM IST

கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறுமென பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளது, மிகவும் மகிழ்ச்சியான செய்தி என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ganguly-saying-ipl-will-happen-at-some-stage-great-news-says-pathan

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

அதேசமயம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையும் நடைபெறுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து ஐசிசி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரானது ஒத்தி வைக்கப்பட்டால், இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம் வந்த இர்பான் பதான், தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியுள்ளது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய இர்பான் பதான், "ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள் என்ற அறிக்கையை நேற்று படித்தேன். எல்லோரும் ஐபிஎல் தொடர் நடைபெறுவதையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் ஏதேனும் ஒரு கட்டத்தில் நடக்கும் என்று பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளது, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு சிறந்த செய்தியாகும். நானும் அத்தொடர் நடைபெறுவதையே எதிர்நோக்கி கத்துக்கொண்டிருக்கின்றேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.