ஐபிஎல்லில் எல்லா அணிகளுக்கும் ரசிகர்களும், வெறுப்பாளர்களும் இருப்பர். ஆனால் டெல்லி அணியை பொறுத்தவரையில் ரசிகர்கள் மட்டுமே இந்தியா முழுவதும் உள்ளனர். ஏனென்றால் அந்த அணியின் மனநிலை வெல்வது மட்டுமே. பெரும்பாலும் இளம் வீரர்களை சிறந்த வீரர்களாக மாற்றுவதில் டெல்லி அணிக்கு நிகர் டெல்லி அணி மட்டுமே. எந்த இளம் வீரர் சிறப்பாக ஆடினாலும் அவர்களை அடையாளம் கண்டு ஐபிஎல்-லில் களமிறக்கி பிரபலப்படுத்துதில் டெல்லி நிர்வாகம் சிறப்பாக செயல்படும். முதல் சீசனில் அதிரடி வீரர் ஷேவாக் தலைமையில் அரையிறுதி வரை முன்னேறியதே அந்த அணியின் சாதனையாக இருக்கிறது.
கடந்த 11 சீசன்களில் இரண்டு முறை அரையிறுதிக்கும், 2012-ஆம் ஆண்டு ப்ளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியதே டெல்லி அணியின் சாதனைகள். டெல்லி அணியைப் பொறுத்தவரையில், எந்த அணியையும் வெல்லக்கூடிய பலத்தினை எப்போதும் பெற்றே இருக்கும். ஆனால் குழுவாக ஆடுவதில் ஏனோ தடுமாற்றம் அடைகிறது.
கொல்கத்தாவிற்காக ஐபிஎல் கோப்பைகளைப் பெற்றுத்தந்த கம்பீர், சொந்த அணிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என நினைத்து கடந்த ஆண்டு தனது மாநில அணிக்கு திரும்பிய காம்பீருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெல்லி அணிக்கு காம்பீரைத் தவிர்த்து பார்த்தால் நல்ல கேப்டன்கள் இல்லாததும் ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
கடந்த சீசனில் காம்பீர் தலைமையில் களமிறங்கி, ரன்கள் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டபோது கேப்டன் பதவியில் இருந்து தானாகவே விடுவித்துக்கொண்டார் காம்பீர். பின்னர், இளம் வீரரான ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக நியமித்தது டெல்லி அணி. டெல்லி அணிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீரர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவுவார். கேதர் ஜாதவ், கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் என ஒவ்வொரு சீசனும் ஒரு வீரர் விஸ்வரூபம் எடுத்து பட்டையக் கிளப்புவார்கள்.
So much to look forward to this season! 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) March 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Book your seats now! Tickets will go live today on @Paytm and @insiderdotin#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/TPMmDrXOAY
">So much to look forward to this season! 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) March 8, 2019
Book your seats now! Tickets will go live today on @Paytm and @insiderdotin#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/TPMmDrXOAYSo much to look forward to this season! 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) March 8, 2019
Book your seats now! Tickets will go live today on @Paytm and @insiderdotin#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/TPMmDrXOAY
கடந்த சீசனில் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் இணை ருத்ர தாண்டவம் ஆடியது, ரசிகர்களுக்கு எப்போதும் நினைவிருக்கும். தற்போது கபாலி ஸ்டைலில், 'நான் திரும்பி வந்துடேன்னு சொல்லு' என்பதுபோல் முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது டெல்லி அணி. அணியில் மட்டும் மாற்றம் செய்யாமல், பெயர் மற்றும் ஜெர்ஸியிலும் மாற்றம் செய்து முற்றிலும் புதிய அணியாக ஐபிஎல்லில் களமாட உள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்.
இதுவரை ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தவான் அணிக்கு திருப்பியுள்ளது சிறந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல் சீசனின் நடுவில் கேப்டன்சியைக் கொடுத்து டெல்லி அணி, இந்த வருடம் தொடக்கத்திலிருந்தே வழிநடத்த ஷ்ரேயஸ் ஐயரை நியமித்தது மிகச்சிறந்த விஷயம்.
பேட்டிங்கில் இளம் படையே ஐபிஎல்லில் தங்களின் திறமையை நிருபிக்க காத்திருக்கிறது என்றே கூறலாம். ஷ்ரேயஸ் ஐயர், ரிஷ்ப் பந்த், விஹாரி, ப்ரித்வி ஷா, மஞ்ஜோத் கல்ரா, அவேஷ் கான் என இளம் படையை மொத்தமாக கைப்பற்றி அணியை உருவாக்கியுள்ளது டெல்லி நிர்வாகம்.
Congratulations to all 4⃣ DC players who have been awarded annual retainer contracts by the BCCI 🙌#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/RSfUEZQW55
— Delhi Capitals (@DelhiCapitals) March 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to all 4⃣ DC players who have been awarded annual retainer contracts by the BCCI 🙌#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/RSfUEZQW55
— Delhi Capitals (@DelhiCapitals) March 8, 2019Congratulations to all 4⃣ DC players who have been awarded annual retainer contracts by the BCCI 🙌#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/RSfUEZQW55
— Delhi Capitals (@DelhiCapitals) March 8, 2019
நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் ஷ்ரேயஸ் ஐயர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் கேப்டன்சியிலும் தேர்ந்த வியூகங்களை வகுத்து தன்னை கேப்டனாக மெருகேற்றிக் கொண்டார். மேலும் ரிஷப் பந்த்தின் அதிரடி, அக்ஸார் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மாவின் அனுபவம் என சிறப்பாக அமைந்திருக்கிறது டெல்லி அணி.
வெளிநாட்டு வீரர்கள் எனப் பார்த்தால் பந்துவீச்சில் போல்ட், ரபாடா என சிறந்த வீரர்களை வைத்துள்ளது. அதேபோல் ஆல்ரவுண்டர்களில் கிறிஸ் மோரிஸ் கெத்துகாட்ட தயாராக உள்ளார். கோலின் இங்ரம் நியூசிலாந்தில் வெளிப்படுத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதுமானது.
டெல்லி அணி எப்படி பார்த்தாலும் இந்த முறை கோப்பையைக் கைப்பற்றுவதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், டெல்லி அணிக்கு பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும், புதிய ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் இருப்பதால் டெல்லி அணி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ரிஷப் பந்த்தும் தன் பங்கிற்கு சமூக வலைதளங்களில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி வருகிறார். பார்ப்போம்.. டெல்லி அணி எதிரணியினருக்கு டரியல் காட்டுமா என்று..!