இந்திய கிரிக்கெட்டில் சூதாட்டம் குறித்த சர்ச்சைகள் அவ்வபோது கிரிக்கெட் வீரர்களிடையே புலியைக் கரைக்கின்றது. ஏனெனில் 2011ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகாரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் சூதாட்ட புகாரினால் இரண்டு ஆண்டுகளுக்குத் தடைசெய்யப்பட்டது. இதனால் வீரர்கள் மத்தில் சூதாட்ட புகார் குறித்த பயம் தொற்றத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஒருவரிடம் டெல்லியைச் சேர்ந்த இரு நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த வீராங்கனை பிசிசிஐயிடம் புகார் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் பெங்களூரு காவல் துறையினரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் அந்த இரு நபர்கள் குறித்த விசாரணையை மேற்கொண்டுவருகின்றது.
சூதாட்டம் குறித்து வீரர்களிடம் சூதாட்டப் புள்ளிகள் நேரடியாக சந்தித்து பேசியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
#TNPL: சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி பரிமாற்றங்கள்: அரங்கேறியதா சூதாட்டம்... அதிர்ச்சியில் பிசிசிஐ!