தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் வெர்னான் பிலாண்டர். இவர் இந்தாண்டு தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு, கேப்டவுன் நகரிலுள்ள ரேவன்ஸ்மீட் பகுதியில் தனது கும்பத்தாரோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை பிலாண்டரின் சகோதரர் டைரோன் பிலாண்டர்(32) அவரது வீட்டருகே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஃபிலாண்டரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தென் ஆப்பிரிக்க காவல்துறையினர், குற்றாவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பிலாண்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது சொந்த ஊரான ரேவன்ஸ்மீட்டில் என்னுடைய சகோதரன் டைரோன் பிலாண்டர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கடினமான சூழ்நிலையில் எங்கள் குடும்பத்தின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.
-
I would like to confirm the following and wish that our family's wish to allow us to mourn be respected. Thank you all for the love and support🙏 https://t.co/ciyEt8VYLT
— Vernon Philander (@VDP_24) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I would like to confirm the following and wish that our family's wish to allow us to mourn be respected. Thank you all for the love and support🙏 https://t.co/ciyEt8VYLT
— Vernon Philander (@VDP_24) October 7, 2020I would like to confirm the following and wish that our family's wish to allow us to mourn be respected. Thank you all for the love and support🙏 https://t.co/ciyEt8VYLT
— Vernon Philander (@VDP_24) October 7, 2020
காவல்துறையினரும் குற்றவாளிகளைப் பிடிக்க முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஊடகங்கள் இடமளிக்க வேண்டும். டைரோன் நம்முடைய இதயத்தில் என்றும் நிலைத்திருப்பார். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இ(எ)துவும் கடந்து போகும் : சென்னை சூப்பர் கிங்ஸிற்கு நம்பிக்கை அளிக்கும் ஹர்பஜனின் வார்த்தைகள்!