ETV Bharat / sports

ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்! - ஆல்ரவுண்டர் சனா மிர்

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் (Sana Mir), அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.

Former Pakistan skipper Sana Mir announces retirement from international cricket

author img

By

Published : Apr 26, 2020, 9:37 AM IST

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீராங்கனையாக வலம்வந்தவர் சனா மிர். 2005ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய மிர், இதுவரை 226 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அதில் 137 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டரான சனா மிர் இதுவரை 120 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,630 ரன்களையும், 152 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் 106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 800 ரன்களையும், 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் மகளிர் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான சனா மிர், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு முடிவு குறித்து சனா கூறுகையில், "15 ஆண்டு காலம் என் நாட்டிற்குச் சேவைசெய்ய எனக்கு வாய்ப்பளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் முடிந்தளவு நன்மைகளை இந்நாட்டிற்கும், இவ்விளையாட்டிற்கும் நான் செய்துள்ளேன். இப்போது நான் அதிலிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் நட்சத்திர வீராங்கனை சனா மிரின் ஓய்வு குறித்து தகவலறிந்த பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் வில்வித்தை தொடர் இனி நேரலையிலும்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.