ETV Bharat / sports

முதலில் நாங்கள் இதை செய்கிறோம்..! பிறகு அதனைப் பார்க்கலாம்..!- வங்கதேச கிரிக்கெட் வாரியம் - பாகிஸ்தானின் பாதுகாப்பை காரணம் காட்டி

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் வாரியாம், பாகிஸ்தான் அணியுடனான மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.

T20 series first, call on playing Tests in Pak later: BCB

author img

By

Published : Dec 25, 2019, 3:57 PM IST

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த வங்கதேசம், மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம், பிசிபி(பங்களாதேஷ் கிரிக்கெட் போர்ட்) பாகிஸ்தானின் பாதுகாப்பை காரணம் காட்டி டெஸ்ட் போட்டியை பொதுவான இடத்தில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷசன் மணி, பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். எந்த அணி பாகிஸ்தான் வர மறுக்கிறதோ, அந்த அணி இங்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் பாகிஸ்தானைவிட இந்தியாதான் மிக மிக அதிகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் கொண்ட நாடு என கடுமையாக சாடியிருந்தார்.

இதனையடுத்து, பிசிபி பாகிஸ்தான் அணியுடனான தொடருக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த அணி முதலில் நாங்கள் டி20 தொடரில் விளையாடுகிறோம். அதன் பின் டெஸ்ட் போட்டியைப் பற்றி யோசிக்கலாம் என தனது நிபந்தனையையும் இணைத்து கூறியது.

மேலும் இதுகுறித்து பிசிபி கூறுகையில், பாகிஸ்தான் அணி தங்கள் நாட்டை முழுமையான கிரிக்கெட் தேசமாக மாற்ற முயற்சித்து வருகிறது. ஆனால் எங்கள் அணியில் உள்ள வீரர்கள், வெளிநாட்டவர்களின் கருத்துகளையும் நாங்கள் ஆலோசிக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி டாப் விக்கெட் லிஸ்டில் முதலிடம் பிடித்த அஸ்வின்!

Intro:Body:

T20 series first, call on playing Tests in Pak later: BCB

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.