சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டின் அனைத்துத் தர போட்டிகளிலும் நடுவராக ஆண்கள் மட்டுமே செயல்பட்டுவந்தனர். இதுவரை ஒரு பெண் கூட நடுவராக இருந்ததில்லை. இப்போது, அந்தக் குறையை தீர்த்துள்ளார் கிளேயர் போலோசாக்!
உலகக் கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 தொடரின் இறுதிப் போட்டி நமீபியாவின் வின்ட்ஹோக் நகரில் நடைபெற்றது. இதில் ஓமன்-நமீபியா அணிகள் விளையாடின.
இப்போட்டியில், நடுவராக கிளேயர் போலோசாக் என்ற பெண் செயல்பட்டார். சர்வதேச ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நடுவராகப் பொறுப்பு வகித்த முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
முன்னதாக, இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராகப் பொறுப்பு வகித்த முதல் பெண் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளேயர் இதுவரை 15 பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.