ETV Bharat / sports

‘நாட்டிற்காக தொடரை வென்றுகொடுத்தது சிறப்பான தருணம்’: நடராஜன்

author img

By

Published : Dec 7, 2020, 9:14 PM IST

நாட்டிற்காக தொடரை வென்று கொடுத்ததை என்னால் மறக்க முடியாது. இது என் வாழ்வின் சிறப்புவாய்ந்த தருணம் என்று இந்திய அணியில் இடம் பெற்ற தமிழ்நாடு வீரர் நடராஜன் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

First series win for my country memorable and special: Natarajan

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் அறிமுக வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் ஷார்ட், ஹென்ரிக்ஸ் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.

இப்போட்டியில் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகானாகத் தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, நடராஜனுக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடராஜன், இந்திய அணியில் தான் இடம் பெற்று முதல் டி20 தொடரை வென்றதை மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் “இந்திய அணியில் இடம் பெற்று முதல் டி20 தொடரை வென்றுள்ளது என்னால் மறக்க முடியாதது, இது மிகவும் சிறப்பானது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் தனது யார்க்கர் வீசும் திறமையால், கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாரட்டைப் பெற்றிருந்தார். இதையடுத்து முதலில் இவர் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் வலைபயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அதன்பின் டி20 தொடருக்கு தேர்வாகியிருந்த மற்றொரு தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக தொடரிலிருந்து விலக, அந்த வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திய நடராஜன் தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: AUS vs IND: ஆஸியை ஒயிட் வாஷ் செய்ய காத்திருக்கும் இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.