இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன். இவர் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க மறுக்கிறார் என ஹைதராபாத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சஹாப் முகமது என்பவர் காவல் துறையினரிடம் புகாரளித்தார். இதையடுத்து முஜீப் கான், சுதேஷ் அவிக்கல், முகமது அஸாருதீன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்தப் புகாரில், கடந்த ஆண்டு நவம்பர் 9 முதல் 12ஆம் தேதி தேதி வரை அவிக்கல் (அவிக்கல் உதவியாளர்) என்பவர் தனீஷ் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடர்கொண்டு விமானப் போக்குவரத்துக்கான டிக்கெட்டுகள் புக் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். டிக்கெட்டிற்கானப் பணம் குறித்து கேட்கப்பட்டபோது, தான் அவசரநிலையில் உள்ளேன். அதனால் பின்னர் தருகிறேன் எனக் கூறியதால் டிராவல்ஸ் உரிமையாளர் உடனடியாக டெல்லி, மும்பை, பாரிஸ், ஆம்ஸ்ட்ரடாம், துபாய் உள்ளிட்ட ஏராளமான நகரங்களுக்கு விமான டிக்கெட்டுகள் புக் செய்து கொடுத்துள்ளார்.
இதற்கு ரூ.21 லட்சம் வரை செலவாகியுள்ளது. ஆனால் டிக்கெட் புக் செய்ததற்கான கட்டணம் 15ஆம் தேதி வரையிலும் வராததால், டிராவல்ஸ் உரிமையாளர் சஹாப் முகமது, அவிக்கல் என்பவைத் தொடர்புகொண்டு பேசியபோது ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் வங்கியில் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டதற்கு பணம் எதுவும் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அஸாருதீன் மற்றும் சுதேஷ் கான் ஆகியோரிடம் பேசய போது, அவிக்கல் நவம்பர் 24ஆம் தேதி அனைத்து தொகையும் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும், நவம்பர் 24ஆம் தேதியன்று பயணம் செய்ததற்கான தொகை ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்தை காசோலையாக தனீஷ் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயரில் வங்கியில் செலுத்திவிட்டதாக அவிக்கல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்தப் பணம் டிராவல்ஸ் உரிமையாளருக்கு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த டிராவல்ஸ் உரிமையாளர் சஹாப் முகமது, காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, பணத்தை விரைவில் கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட அவகாசத்தில் பணத்தை வழங்காததால், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 99 வெற்றிகள்... ஆஸ்திரேலிய ஓபனில் சதம் விளாச காத்திருக்கும் ஃபெடரர்!