ETV Bharat / sports

ஒரு கோப்பைக்காக மோதும் ஐந்து டீம்... பிக் பாஷ் புதுமை!

நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் டி20 தொடரின் புதிய விதிமுறைப்படி புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேற ஐந்து போட்டிகளில் விளையாடும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

Big Bash League 5-team finals format
Big Bash League 5-team finals format
author img

By

Published : Jan 22, 2020, 7:24 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடர் உலகளவில் மிகவும் பிரபலமானது. தற்போது பிக் பாஷ் டி20 தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுவரை வரலாற்றில் இல்லாத புதிய விதிமுறையை மாற்றியமைத்துள்ளது. அதன்படி இந்தத் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்கள் பிடிக்கும் அணிகளும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளது.

பொதுவாக, எந்த ஒரு கிரிக்கெட் தொடராக இருந்தாலும் சரி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிச் சுற்றுக்கோ அல்லது நவீன டி20 கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பிளே ஆஃப் சுற்றுக்கோ முன்னேறும். இந்த விதிமுறைதான் கிரிக்கெட் வரலாற்றில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

Big Bash League 5-team finals format
பிக் பாஷ்

ஆனால், புதிய விதிமுறைப்படி பிக் பாஷ் டி20 தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளது. அதன்படி எலிமினேட்டர், குவாலிஃபையர், நாக் அவுட், சேலஞ்சர் ஃபைனல் என ஐந்து போட்டிகள் முறையே ஜனவரி 30, ஜனவரி 31, பிப்ரவரி 1, பிப்ரவரி 6, பிப்ரவரி 8ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அணிகள்...ஐந்து போட்டிகள்:

எலிமினேட்டர்: புள்ளிப்பட்டியலில் நான்காவது, ஐந்தாவது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் பிரிவில் மோதும். இதில், வெற்றிபெறும் அணி மூன்றாவது இடத்தில் இருக்கும் அணியுடன் மோதும் போட்டிதான் நாக் அவுட். இப்போட்டி குவாலிஃபையர் போட்டிக்கு பின் நடைபெறும்.

குவாலிஃபையர்: புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கிடையே நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

இதில், தோல்வியடையும் அணி நாக் அவுட் போட்டியில் வெற்றிபெற்ற அணியுடன் மோதும் போட்டிதான் சேலஞ்சர். பெயருக்கு ஏற்றார் போல் சேலஞ்சரில் வெல்லும் அணி, குவாலிஃபையரில் வென்ற அணியுடன் இறுதிச்சுற்றில் போட்டியிடும்.

பொதுவாக, புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிக்கும் பெரும்பாலான அணிகள் நெட் ரன்ரேட் முறைப்படியே அரையிறுதி அல்லது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கின்றன. ஏனெனில், நான்காவது ஐந்தாவது இடத்தை பிடிக்கும் அணிகளின் புள்ளிகள் ஒரே மாதிரிதான் இருந்திருக்கின்றன.

இதனால், ஐந்தாவது இடத்தை பிடிக்கும் அணியையும் கருத்தில்கொண்டது மட்டுமில்லாமல் தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிக் பாஷ் தொடர்மூலம் கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிமுறை நிச்சயம் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதிமுறை ஹிட்டானால் நிச்சயம் பின்நாட்களில் ஐபிஎல் தொடரிலும் இது கடைபிடிக்கப்படலாம்.

முன்னதாக, பிக் பாஷ் தொடரின் இறுதி போட்டி ஒருவேளை சமனில் முடிந்தால் ஐசிசியின் பவுண்டரி கணக்கு விதிமுறைக்கு பதில் வெற்றியாளரை தீர்மானிக்கும்வரை சூப்பர் ஓவர் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது. அதன்பின்னர், ஐசிசியும் இந்த விதிமுறை, தொடரின் அரையிறுதி, இறுதி போட்டிகளில் கடைபிடிக்கப்படும் என தெரிவித்தது.

22.01.2020 நிலவரப்படி பிக் பாஷ் டி20 தொடரின் புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி முடிவு இல்லை புள்ளிகள் நெட் ரன்ரேட்
மெல்போர்ன் ஸ்டார்ஸ் 13 10 3 0 20 +0.891
அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் 12 7 4 1 15 +0.639
சிட்னி சிக்சர்ஸ் 12 7 4 1 15 +0.070
பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் 12 6 6 0 12 +0.066
சிட்னி தண்டர்ஸ் 12 5 6 1 11 -0.236
பிரிஸ்பேன் ஹீட் 11 5 6 0 10 -0.469
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் 12 4 7 1 9 -0.748
மெல்போர்ன் ரெனகேட்ஸ் 12 2 10 0 4 -0.424

இதில், 20 புள்ளிகளுடன் முதலிடத்திலிருக்கும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி மட்டுமே குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் நடப்பு சாம்பியனான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி நான்கு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருப்பதுதான் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது.

இதையும் படிங்க: 30 ஓவர்களில் நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்திய இந்திய ஏ

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/explained-big-bash-league-5-team-finals-format/na20200122152631499

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.