ETV Bharat / sports

Exclusvie: 'கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவதே தற்போது முக்கியம்' - மாண்டி பனேசர்

author img

By

Published : Jun 25, 2020, 5:24 PM IST

தற்போதைய சூழலில் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்குவதே மிக முக்கியம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

exclusive-panesar-explains-bio-secure-environment-opens-up-on-saliva-ban

கரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் மாதத்திற்குப் பின் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஜூலை 8ஆம் தேதி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் 2019-2021ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாகும். மே, ஜூன் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய தொடர், கரோனா வைரஸ் காரணமாக ஜூலையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் ஈ-டிவி பாரத் செய்திகளுக்குப் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், ''கரோனா சூழலில் பார்வையாளர்களின்றி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது சரியான முடிவுதான். ஏனென்றால் மைதானத்தில் சிலர் மட்டுமே இருப்பார்கள். அவர்களையும் நிர்வகிக்க எளிதாக இருக்கும்.

மாண்டி பனேசர் பிரத்யேக பேட்டி

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வீரர்கள் தங்கும் ஹோட்டல்களில் வேறு யாரும் தங்கவைக்கப்பட மாட்டார்கள். அதனால் அவர்களைக் கண்காணிப்பதும் எளிதாக இருக்கும். வீரர்களுக்கும் தொடர்ந்து கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் செய்யக்கூடியவை குறித்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பந்துகளில் உமிழ்நீர் பயன்பாடு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது. என்னைப் பொறுத்தவரையில் வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

அதனால் உமிழ்நீர் தடையை ஆதரிக்கிறேன். தற்போதைய சூழலில் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்குவதே மிகவும் முக்கியம். போட்டியின் முடிவில் வீரர்கள் யாருக்கேனும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானால், நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும்.

உமிழ்நீருக்குப் பதிலாக மெழுகு உள்ளிட்ட சில திரவங்களைப் பந்துகளில் பயன்படுத்தலாம். இதனைப் பயிற்சியின்போது வீரர்கள் சோதனை செய்து பார்க்கலாம்'' என்றார்.

இதையும் படிங்க: Exclusive: ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி யார் சிறந்த பேட்ஸ்மேன்? - மாண்டி பனேசர் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.