ETV Bharat / sports

இங்கிலாந்து வீரர் டாம் பான்டனுக்கு கரோனா உறுதி! - பாகிஸ்தான் சூப்பர் லீக்

இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பான்டன் தனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

England's Tom Banton tests COVID positive

author img

By

Published : Mar 3, 2021, 10:37 PM IST

இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்பவர் டாம் பான்டன். தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறார்.

இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கு சமீபத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையின் முடிவில் டாம் பான்டன் உள்பட மேலும் இரண்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்திதொடர்பாளர் சமி பர்னே உறுதிசெய்துள்ளார்.

இதையடுத்து டாம் பான்டன் தனது ட்விட்டர் பக்கத்தில், “துரதிர்ஷ்டவசமாக எனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது நான் பிஎஸ்எல் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். உங்களது ஆதரவுக்கும் அன்புக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அதேசமயம் நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கபில் தேவ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.