கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடுவதாக இருந்தது. தற்போது நிலவி வரும் அசாதரண சூழல் காரணமாக இவ்விரு அணிகளுக்கிடையிலான தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து மற்றும் வால்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்விரு அணிகளுக்குமிடையிலான இத்தொடர் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தொடங்கும் என்றும், இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இங்கிலாந்தில் மே 28ஆம் தேதி வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தோனிக்காக பாடல் பாடிய 'சாம்பியன்' பிராவோ