இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சால் 205 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் அக்சர் பட்டேல் நான்கு விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை எடுத்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருந்தது.
இதனையடுத்து, இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 8 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
Big wicket for England!
— ICC (@ICC) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Virat Kohli is caught behind for nought off Ben Stokes ☝️#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/jpbh6SpUCZ
">Big wicket for England!
— ICC (@ICC) March 5, 2021
Virat Kohli is caught behind for nought off Ben Stokes ☝️#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/jpbh6SpUCZBig wicket for England!
— ICC (@ICC) March 5, 2021
Virat Kohli is caught behind for nought off Ben Stokes ☝️#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/jpbh6SpUCZ
அதன்பின் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி ரன் ஏதுமின்றி பென் ஸ்டோக்ஸிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய ரஹானே - ரோஹித்துடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின்னர் 27 ரன்கள் எடுத்திருந்த ரஹானே, ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை எடுத்துள்ளது.
-
James Anderson claims the wicket of Ajinkya Rahane at the stroke of lunch, and it's a good session for England!
— ICC (@ICC) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
India are 80/4, trailing by 125.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/I5PFQi1edE
">James Anderson claims the wicket of Ajinkya Rahane at the stroke of lunch, and it's a good session for England!
— ICC (@ICC) March 5, 2021
India are 80/4, trailing by 125.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/I5PFQi1edEJames Anderson claims the wicket of Ajinkya Rahane at the stroke of lunch, and it's a good session for England!
— ICC (@ICC) March 5, 2021
India are 80/4, trailing by 125.#INDvENG | https://t.co/6OuUwURcgX pic.twitter.com/I5PFQi1edE
இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ், ஜேக் லீச் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து 125 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
இதையும் படிங்க: 90’ஸ் ஹீரோக்கள் ரீ எண்ட்ரி; காத்திருப்பில் ரசிகர்கள்!