2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்ற மிக முக்கிய காரணமாக இருந்தவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். உலகக்கோப்பைத் தொடரின்போது வீரர்களுக்கு கோப்பையுடன் சேர்த்து பதக்கமும் வழங்கப்படும். அந்தப் பதக்கத்தை வென்ற வீரர்கள் அனைவரும் அதனை பொக்கிஷமாக வைத்துப் பார்த்துகொள்வார்கள்.
ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீடு மாறியபோது உலகக்கோப்பை வென்ற பதக்கத்தை தவறவிட்டதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், தவறவிட்ட உலகக்கோப்பைப் பதக்கத்துடன் ஆஷஸ் தொடரில் வென்ற பதக்கத்தையும் சேர்த்து எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டார்.
-
Randomly searching the guest bedroom and boom 🥺 pic.twitter.com/EPNC55tN37
— Jofra Archer (@JofraArcher) April 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Randomly searching the guest bedroom and boom 🥺 pic.twitter.com/EPNC55tN37
— Jofra Archer (@JofraArcher) April 26, 2020Randomly searching the guest bedroom and boom 🥺 pic.twitter.com/EPNC55tN37
— Jofra Archer (@JofraArcher) April 26, 2020
அதனோடு, விருந்தினர் அறையில் இருந்த எனது பதக்கத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்...! நினைவுகூறும் யுவராஜ் சிங்!