கரோனா வைரஸுக்கு மத்தியில் நடைபெறும் முதல் சர்வதேச டி20 தொடராக இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் அமைந்துள்ளது. முன்னதாக, இத்தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக 16.3 ஓவர்களுடன் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியான இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரில் இன்று (ஆக.30) நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
-
Eoin Morgan has won the toss and England will field first 🏴 #ENGvPAK pic.twitter.com/u7bdM9ZwXj
— ICC (@ICC) August 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Eoin Morgan has won the toss and England will field first 🏴 #ENGvPAK pic.twitter.com/u7bdM9ZwXj
— ICC (@ICC) August 30, 2020Eoin Morgan has won the toss and England will field first 🏴 #ENGvPAK pic.twitter.com/u7bdM9ZwXj
— ICC (@ICC) August 30, 2020
மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இன்றி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி: டாம் பான்டன், ஜானி பேர்ஸ்டோவ் , டேவிட் மாலன், இயன் மோர்கன் (கே), சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, டாம் குர்ரான், லூயிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜோர்டான், அதில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.:
பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கே), ஃபக்கர் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சதாப் கான், இமாத் வாசிம், முகமது அமீர், ஹரிஸ் ரவூப், ஷாஹீன் அஃப்ரிடி.
இதையும் படிங்க: 'மீண்டும் அணியில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த வெகுமதி' - மார்க்கஸ் ஸ்டோனிஸ்!